Monday, July 19, 2010

இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் - 2!



ஆறாம் கல் எறியப்பட்டது...

இது கொஞ்சம் கொடுமைங்க....நம்ம frequency -க்கு tune ஆகுற ரூம் mates கிடைக்கிறது ரொம்ப அபூர்வம்...அதுலயும் புதுசா ஒரு இடத்துக்கு போய்...அங்கயும் நம்ம frequency match பண்ற மாதிரி ரூம் mates friends கிடைச்சா அது அல்லவோ வாழ்கை! ஆமாங்க அப்படி தான் எனக்கும் சில பேர் ரூம் mates கெடைச்சாங்க... என் கல்லூரி-இன் முதலாம் ஆண்டு...முதல் இறுதி ஆண்டு வரை...4 வருஷமா ஒரே ரூம் mates கூட இருந்தேன்-ன்னு சொல்றதே ஒரு பெரிய வெற்றி தான் இல்லையா...? அந்த வழியில நானும் ஒரு வெற்றியலனே...! இந்த பதிவு எனது ரூம் mates இருந்த/இருக்கற எல்லாருக்கும் சமர்ப்பணம்...அதிலயும் குறிப்பா கலைச்செல்வன்... நடைமுறைக்கும் எதிர்மறைக்கும் இடையே ஆனா வித்தியாசத்த எனக்கு அழகா புரிய வெச்ச இன்னொரு நண்பன்! என் ரூம் மேட்....! காலேஜ்- இருந்தே...

ஏழாம் கல் எறியப்பட்டது...

பவ்யா சத்யமூர்த்தி! என்னோட காலேஜ் மேட்... in fact காலேஜ் நான் பெருசா மதிச்ச என்னோட இன்னொரு தோழி... of course i enjoyed her frienship to the core ... நான் என்ன சொன்னாலும் எனக்கு counter கொடுக்க ready ஒரு பதில் எப்பவுமே வெச்சி இருப்பா! இவள் ஒரு நடமாடும் Wikepedia...!

frequency ... wave length இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கோ எல்லாத்தியும் சேத்துகோங்க...எங்க நட்புல எல்லாமே ஒத்து போச்சு....!

கல்லூரி-யில் எறியபட்ட கல் இன்றும் தொடர்ந்து எறியப்படுகிறது... என்ன ஒண்ணு ரொம்ப தூரத்தில இருந்து...:-(

ஆமாங்க...அவ இப்போ பெங்களூர் ..நான் இங்க சென்னை ...

எட்டாம் கல் எறியப்பட்டது....

மரிய ஆல்பர்ட் joe ராஜ்குமார்! - இதுதாங்க அவன் முழு பேரு.... ஆனா 1st year லயே அதுவும் காலேஜ் ஆரம்பிச்ச 3-வது நாளே ஒரு பொண்ணுகிட்ட போய்...உங்க பிரென்ஷிப் வேணும்னு ரோஸ் நீட்ற தைரியம் யாருக்குங்க வரும்...? அன்றைக்கே முடிவு பண்ணிட்டோம்..இவன் காலேஜ் பொண்ணுங்க எல்லாருக்கும் ஒரு GODFATHER ன்னு...! இவனுக்கு இருப்பது வியாதியா இல்ல திறமையா ன்னு தெரியல... எந்த பொண்ணா இருந்தாலும் 10 நிமிஷத்தில correct பண்ணி கடலைய போட ஆரம்பிச்சுடுவான்... ஆனா என்ன ஒண்ணு...

இவன் கிட்ட நீங்க கடன் கூட வாங்கிடலாம்...ஆனா இந்த காதல வாங்க முடியாது... அதுல மட்டும் அவ்ளோ தீர்மானமா இருந்தான்...!

நான் இன்னைக்கு இப்படி இருக்கறதுக்கு இவனும் ஒரு காரணம்!:-) காலேஜ் எந்த year எந்த பொண்ணு அழகா இருந்தாலும் அடுத்த நாளே இவன் Database update ஆகிவிடும்...

CASANOVA ன்னு வார்த்தைக்கு அர்த்தம் இவன கேட்டா தெரியும்...

காதல்...களவு...

ரெமி மார்டின்...ரிக்கி மார்டின்...

கார்ல் மார்க்ஸ்...கலியுக கண்ணன்..

பங்குச்சந்தை..பாவாடைதாவணி...

கணிப்பொறி...கண்ணிவெடி!

இன்னும் வேற என்னென்ன முன்னுக்கு பின் முரணான விஷியங்கள் இருந்தாலும் இவன் பங்களிப்பு அதில் அதிகமே இருக்கும்!

காரணம் இவனோட ஈடுபாடு அவ்ளோ இருக்கும்!

இவனை சந்திச்சு இன்னையோட 8 ஆண்டுகள் முடியபெற்றது!

இன்னும் இந்த கல் என்மீது எறியபட்டுகொண்டே...

ஒன்பதாம் கல் எறியப்பட்டது..!

ஒட்டுமொத்த கல்லூரியும் சேர்ந்து...:-) ஆமாங்க...காலேஜ் மொத்தமா சேந்து என் மீது கல் எறிந்தது..இன்றும் இனிக்கிறது! என் dept இருந்த frenz விட மத்த dept இருந்த frenz தான் அதிகம்....உண்மை தான்... நான்கு வருட கல்லுரி படிப்பு முடிவுக்கு வந்த பொழுது....கொஞ்சம் பீலிங்கா தான் இருந்துச்சு....ஆனா இந்த ஆல்பர்ட் மட்டும் என்ன ஜென்மமோ தெரியலோ..பயபுள்ள எதுக்குமே அழுது தொலைக்கமாட்றான்..:-) இது பத்தாததுக்கு campus interview வேற... என்ன எங்கயோ கொண்டு போகும்ன்னு பாத்தா...அதுவும் இவர்களுடன் சேர்ந்து என் மீது கல் எறிய ஆரம்பித்தது! என்ன ராசியோ தெரியல... எல்லா interview லயும் என் பேர் short லிஸ்ட் ஆகும்...but somehow or the otherway i am out of sqaud for the final round! இருந்தாலும் ஒரு நம்பிக்கை தான் நமக்கும் ஒரு விடியல் உண்டுன்னு...

பத்தாம் கல் எறியப்பட்டது - பதினோராம் கல் எறியப்பட்ட அதே பொழுதுகளில்!

ஆமாங்க...என் ராசியோ என்னவோ ..campus interview எவ்வளோவோ வாய்ப்புகள் இருந்தும் என்னோட கட்டங்கள் சரியா அமையததால off campus தான் ஒரு வேலைக்கு போக முடிஞ்சுது!

என்னோட முதல் சம்பளம் 7300 ... 11 நாட்கள் நான் வேலை செய்தததை முன்னிட்டு எனக்கு HCLHC HCL இருந்து cheque கொடுக்கப்பட்டது!

என்னோட முதல் சந்தோஷம்..! - after being out of college...

கைகளில் பணம் இல்லை...

ஆனா மனசில நம்பிக்கை நெறையவே இருந்துச்சு...

every dog has its own day ன்னு இங்கிலீஷ்- ஒரு பழமொழி உண்டு...

அதனால...நானும் HCL day -நைட் shift வேல பாக்க ஆரம்பித்தேன்...!

மூன்று மாதத்திற்குள் நான் இப்போ வேல பாக்குற கம்பெனில இருந்து ஒரு மின்னஞ்சல்..."You have your written test on 28th Oct 2010 ன்னு"

அதுக்குள்ள என்னனமோ நடந்து இன்னைக்கு நானும் ஒரு மென்பொருள் வல்லுனர்! :-)

இந்த மென்பொருள் துறை...எனக்கு எண்ணற்ற

'முதல்' களை தந்துள்ளது..

முதல் சந்தோஷம்...முதல் சம்பளம்...முதலாய் சம்பாதித்து முதலாய் செலவு செய்தது...முதல் கடன்...முதல் BLOG! முதல் ரசிகை... ஹ்ம்ம் இன்னும் நெறைய...

பதினோராம் கல் எறியப்பட்டது - பத்தாம் கல் எறியப்பட்ட அதே தினங்களில்!

எங்கு பிறந்தோம்...?

எங்கு வளர்ந்தோம்..?

எப்படி நண்பர்களானோம்..?-ன்னு இன்னும் தெரியல...

"ஆல் இஸ் well " மாதிரி... எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு...

என்னோட எல்லா செயல்களிலும் அவள் பங்களிப்பு அதிகமாவே இருந்துச்சு...

அவளுடனான பொழுதுகளில் ஆசிர்வதிக்கபட்டவனாய் உணர்ந்தேன்...

காரணம்...

என்னை அதிகமாக சிரிக்க வைத்தவளும்...

என்னை அதிகமாக அழ வைத்தவளும்...அவளே!

இங்கிலீஷ்- ஒரு Saying இருக்கு ..!

"My Best Dream and Worst Nightmare had the same person in it"

ஆமாங்க எனக்கும் அப்படிதான்...

காரணமே இல்லாம சிரித்தது போய்...

இன்னைக்கு,

காரணமே இல்லாம அழவும் கத்துகிட்டேன்...! - காரணம் அவளே!

நான் அவளுக்கு தபுசங்கரை அறிமுகம் செய்து வைத்தேன்..

அவளோ எனக்கு சிட்னி ஷெல்டன்- அறிமுகம் செய்து வைத்தாள்...

தோல்வி எனக்கு பிடித்திருந்தது...

தோற்பது அவளிடம் என்பதால்!

அவள நெனச்சி இந்த பதிவு எழுதும் போது ஒரு புதுகவிஞனின் இந்த கவிதை தான் ஞாபகத்துக்கு வருது..

பெண்ணே,

உனக்கு

நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்...

அன்பு ஒன்று தான் நிரந்தரம்

என்றிருந்த எனக்கு

அதுவும் இல்லையென புரியவைத்ததற்கு...!

-யாரோ!

நட்புக்கு முன்னாடி

காதல் தோத்துடும் நம்பிகிட்டு இருந்த எனக்கு....அடேய் மடையா...

கல்யாணத்துக்கு அப்பறம் நட்பு தோத்துடும்...

தோத்துடணும்...அது தான் உத்தமம்-ன்னு எனக்கு புரிய வைத்தவள்!

இந்த கல் என்மீது என்றென்றும் எறியப்பட வேண்டும் என்பது,

என் விருப்பம் மட்டும் அல்ல...என் தவமும் கூட!





No comments: